2.8 கி.மீ. நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை

0 3211
4 சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கி.மீ. நீளமுள்ள ரயில் உருவாக்கப்பட்டது

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ரயிலாக இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்லப் பயன்படும் சரக்குப் பெட்டகங்கள் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 2 புள்ளி 8 கிலோமீட்டர் நீளமுள்ள நீண்ட ரயிலை உருவாக்கினர்.

4 ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலிச் சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சேஷ்நாக் எனப் பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை இயக்கித் தென்கிழக்கு மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments