ஃபேர் அண்ட் லல்வி இனி 'க்ளோ அண்ட் லல்வி'... பெயர் மாற்றியது யுனிலிவர்!

0 2661

ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தின் சருமப் பாதுகாப்பு தயாரிப்பான 'ஃபேர் & லவ்லி' பிராண்டின் பெயர் 'க்ளோ & லவ்லி' என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை, ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் 'வெள்ளையாக இருப்பது தான் அழகு' என்பதை குறிக்கும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாயிட் மரணத்துக்கு பிறகு, உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  நிறத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யும் ஃபேர் & லவ்லி பிராண்டுக்கு  எதிர்ப்பு எழுந்தது.

அதனால், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 'ஃபேர் & லவ்லி'  பிராண்டின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்தது.  'இனி சருமத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஃபேர் & லவ்லி பெயரும் மாற்றப்படும்" என்று கூறியது யுனிலிவர் நிறுவனம். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது க்ளோ & லவ்லி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. 

அந்த நிறுவனம் கூறுகையில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் சருமப் பாதுகாப்பு தொடர்பான புரட்சிகரமான முடிவை எடுத்திருக்கிறோம். நேர்மறையான அழகை வெளிப்படுத்தும் வகையில் க்ளோ & லவ்லி என்று ஃபேர் & லல்வியின் பெயரை மாற்றியுள்ளோம்.  சில மாதங்களில் க்ளோ & லவ்லி பிராண்ட் கடைகளில் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments