ஜியோவில் இன்டெல் கேப்பிட்டல் முதலீடு..!

அமெரிக்காவின் இன்டெல் கேப்பிட்டல் ஜியோவில் ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான இன்டெல் கேப்பிட்டல் ஜியோவில் ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீடு செய்து பூஜ்யம் புள்ளி மூன்று ஒன்பது விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் நாளில் இருந்து 11 வாரங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 நிறுவனங்களிடம் இருந்து ரிலையன்ஸ் மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 588 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பேஸ்புக், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக், ஐக்கிய அரபு அமீரகத்தின் முபாதலா உள்ளிட்டவை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.
Comments