இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 20,903பேருக்கு நோய்த் தொற்று

0 1393
கொரோனா பாதிப்பு 6.25 லட்சத்தை கடந்தது, பலி 18 ஆயிரத்தை தாண்டியது

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் மேலும் 379 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 18,213ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் குணமான நிலையில், 2 லட்சத்து 27ஆயிரத்து 439பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,178ஆக உயர்ந்துள்ளது.

2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 392ஆகவும், பலி எண்ணிக்கை 1,321ஆகவும் அதிகரித்துள்ளது.

3ம் இடத்திலுள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 92 ஆயிரத்து 175ஆக அதிகரித்த நிலையில், உயிரிழப்பு 2,864ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments