வெறி நாய் போல உடலெல்லாம் கடித்த கொடூரன்..! சிறுமி கொலை பகீர்

0 87398

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் அருகே 7 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெறி நாய் போல கடித்து குதறி கொன்றதாக பூ வியாபாரி கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி குறிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் பெண் ஒருவரின் 7 வயது மகள் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 29ந்தேதி அந்த சிறுமி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாயமானார்.

அவர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 1ந்தேதி மாலையில் உடல் முழுவதும் காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமி ஊருணி ஒன்றில் ஆடைகளின்றி சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றி விசாரித்த காவல் துறையினர் சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி உறவினர்கள் போராடிவந்த நிலையில் வியாழக்கிழமை மாலை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பூ வியாபாரி ஒருவனை பிடித்து விசாரித்த போது சிறுமி கொலைக்காண மர்மம் விலகியது.

சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் தினமும் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் மன நிலை பாதிக்கப்பட்ட தாய் மட்டும் உள்ள நிலையில் சிறுமியை கவனித்துக் கொள்ள பொறுப்பான ஆட்கள் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பூவியாபாரி ராஜா என்பவர் அந்த சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகியுள்ளான்.

சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூரன் ராஜா, உடல் முழுவதும் வெறிபிடித்த நாய் போல கடித்து வைத்துள்ளான். வலிதாங்காமல் அலறித்துடித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை ஊருணியில் உள்ள செடிகளின் மறைவில் போட்டு மூடிவிட்டு தப்பியுள்ளான். இரு தினங்களாக சிறுமி தேடப்பட்ட நிலையில் இவனும் தேடுவது போல நடித்துள்ளான்.

ஏற்கனவே சிறுமியிடம் சிறிய அளவில் சேட்டைகள் செய்த போது இவனை ஒருவர் கூட எச்சரிக்காததால், செல்போனில் ஆபாச படங்களை பார்த்து இந்த கொடூர செயலுக்கு உந்தப்பட்டதாக தெரிவித்துள்ளான் கொடூரன் ராஜா என்கின்றனர் காவல்துறையினர்.

பாலியல் கொடூரன் ராஜா மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்க்கிடையே இந்த சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

அதே நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பழகும் வெளி நபர்கள் குறித்து முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இது போன்ற விபரீத சம்பவங்களை தடுக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.

இதனிடையே வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவை திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இந்திரா காந்தி முன்பு போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து  புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட சிறையில் உரிய பரிசோதனைக்கு பின்னர் ராஜாவை அழைத்து சென்று போலீசார் அடைத்தனர்.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட சீர் உதவித் தொகையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்தபடி 5 லட்சம் ரூபாயுடன் சேர்த்து இந்த தொகையும்,  வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments