உ.பி, பீகாரில் இடிமின்னல் தாக்கி 31 பேர் உயிரிழப்பு

0 1649

பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக இடிமின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாகப்பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் புதிதாக 31 பேர் இடி மின்னல் தாக்கி இறந்ததாக தகவல்வெளியாகியுள்ளது.

அஸ்ஸாமில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். ஏராளமான விளை நிலங்கள் மழையால் குளம் போல் காட்சியளிக்கின்றன.சுமார் 73 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

அஸ்ஸாமில் உள்ள 33 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் மழை கொட்டிய போதும் தலைநகரான டெல்லியில் இயல்பான பருவநிலையே காணப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments