மியான்மர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் வழங்கும் சீனா

0 7394

மியான்மரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளான அராக்கன் ஆர்மி, அராக்கன் ரோஹிங்யா விடுதலைப் படை போன்றவற்றுக்கு சீனா ஆயுதங்கள் அளிப்பதாக, மியான்மர் தலைமை தளபதி மின் ஆங் லயிங் (Min Aung Hlaing) கூறி உள்ளார்.

ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், கடந்த ஆண்டு மியான்மர் ராணுவத்தை தாக்கியபோது இந்த தீவிரவாத அமைப்புகள் சீன ஆயுதங்களை பயன்படுத்தின என கூறினார். தீவிரவாதிகளை ஒடுக்கவும், சீனாவின் அத்துமீறலை தடுக்கவும் சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மியான்மர் தீவிரவாதிகளுக்கு நவீன ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, அவர்களை மியான்மருக்கும், இந்தியாவுக்கும் எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டுவதாக அங்குள்ள லைகாஸ் (Licas) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments