27,956 தமிழர்களை மீட்க என்ன திட்டம் ? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1838

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வருவதற்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ராஜா முகமது தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், விமானங்கள் தரை இறங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு என்று வாதிட்டார்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வழங்க கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம்,  வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும், நேர்மறையான தீர்வை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments