தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்

0 2537

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி ரகூட்டன் கிரிம்ஸன் ஹௌஸ் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் உறிரோஷி மிகிடனி, பி2டபிள்யு நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், சீ லிமிடெட்  நிறுவன தலைவர் மற்றும் குழு முதன்மைச் செயல் அலுவலர் ஃபாரஸ்ட் லீ, க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ஷாலண்டோ எஸ்ஈ ஹெட்குவாட்டர் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழலை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர், அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments