ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு

0 2016

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது, கொரோனா பாதிப்பைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

புடினுடன் தொலைபேசியில் பேசிய மோடி, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75ஆண்டு நிறைவையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ரஷ்ய அதிபராகப் புடின் மீண்டும் தொடர வகைசெய்யும் சட்டத் திருத்தம் நிறைவேறியதற்கும் வாழ்த்து தெரிவித்தார். கொரோனாவுக்குப் பிந்தைய சவால்களைக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளிடையான உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கப் புடினை வரவேற்பதற்கான தனது ஆர்வத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

பல துறைகளிலும் இருநாடுகளிடையான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இருவரும் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments