காவல் நிலைய மரணங்கள் என்பது தவிர்க்கப்படவேண்டியவை - ஐ.ஜி. முருகன்

0 1626

மதுரையில் புதிய தென்மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.ஜி. முருகன், லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்றும், அதுதான் காவல்துறையின் நிலைபாடு எனவும் தெரிவித்தார்.

தென்மண்டல காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முருகன், இன்று மதுரை ரேஸ் கோர்ஸ் பகுதியில அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறை யினருக்கு போதுமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனை முறையாக பின்பற்றினாலே சாத்தான்குளம் சம்பவம் போன்ற நிகழ்வுகள் அரங்கேறாது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments