சென்னையில் கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 61 சதவீதமாக உயர்வு

0 1600

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 61 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி இன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் 15 மண்டலங்களிலும் 60 ஆயிரத்து 533 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டதாகவும், அதில் இதுவரை 36 ஆயிரத்து 826 பேர் குணமாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 15 மண்டலங்களிலும் 22 ஆயிரத்து 777 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 929 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் அண்ணாநகரில் அதிகபட்சமாக 2ஆயிரத்து 948 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோரில் 59 புள்ளி 27 சதவீதம் பேர் ஆண்கள், 40 புள்ளி 73 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments