ரஷ்யாவில் இருந்து 143 இந்தியர்கள் நாடு திரும்பினர்

ரஷ்யாவில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 143 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்ற நிலையில், கொரோனா ஊரடங்கு, விமான போக்குவரத்து தடையால் திரும்பி வர முடியாமல் தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு திரும்ப அழைத்து வருகிறது.
அதன்படி, மாஸ்கோவில் இருந்து 143 இந்தியர்கள், ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 3.40 மணிக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனர்.
143 பேருக்கும் அந்த விமான நிலையத்திலேயே மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த 143 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தவர் ஆவார்கள்.
Comments