மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலி

0 630

மியான்மரின் வடக்கு மாகாணமான கச்சினில், பாகன்ட் என்ற இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் வரை இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் கற்களை  சேகரித்துக் கொண்டிருந்த போது, கனமழையால் ஏற்பட்ட சேற்று மண் சரிந்து அவர்களை மூடிவிட்டதாக மியான்மரின் தீயணைப்புத் துறை முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இதுவரை 50 உடல்களை மீட்டுள்ளதாக கூறியுள்ள தீயணைப்புத் துறை, சேற்று மணலை முழுமையாக அகற்றினால் மட்டுமே உயிரிழப்பு எத்தனை என கூறமுடியும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments