பிரேசிலில் சூறாவாளிக் காற்று வீசியதில் 9 பேர் உயிரிழப்பு

0 798

பிரேசிலில் சூறாவளிக்காற்று வீசியதில் 9 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாண்டா கேடரினா  மாநிலத்தின் ஃப்ளோரியானோபொலிஸ் நகரில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பெயர்ந்து பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

மின்கோபுரங்களும் சேதமடைந்ததில், 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலெக்ரே நகரில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments