அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 52,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2129

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அதிக அளவாகப் புதனன்று ஒரே நாளில் புதிதாக 52 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 27 லட்சத்து 79 ஆயிரத்து 953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 798 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் கடந்த வாரத்தில் ஒவ்வொருநாளும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் புதனன்று மட்டும் புதிதாக 52 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments