நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 6.04 லட்சத்தை தாண்டியது

0 836

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும்  434 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641ஆகவும்,  பலி  எண்ணிக்கை 17,834ஆகவும் அதிகரித்துள்ளது.   2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை பெறும் நிலையில்,  3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் குணமாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில்  பாதிப்பு  1 லட்சத்து 80 ஆயிரத்து 298ஆகவும், பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 53ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 94 ஆயிரத்தை தாண்டிய நிலையில், டெல்லியில் 89 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 588 மாதிரிகள்  பரிசோதிக்கப்பட்டதாகவும், இதையும் சேர்த்து 90 லட்சத்து 56 ஆயிரத்து 173 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments