மோட்டார் உலகின் மதிப்பு மிகுந்த நிறுவனமானது டெஸ்லா ; டொயோட்டா இடத்தை பிடித்தது!

0 1951

உலகின் மதிப்பு மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது டெஸ்லா நிறுவனம். முதலிடத்தில் இருந்த டொயோட்டா நிறுவனத்தை விட 6 பில்லியன் டாலர்கள் அதிகமாக டெஸ்லா சந்தை மதிப்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்கார்லோஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது டெஸ்லா நிறுவனம். எலான் முஸ்க் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். எலக்ட்ரிக் கார்களை தயாரித்து உலகமெங்கும் பிரபலமடைந்துள்ள, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் இன்று காலையில் 5 சதவிகிதம் உயர்ந்து 1,133 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. இதனால், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 207.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதே காலக்கட்டத்தில் டொயாட்டா நிறுவனத்தின் மதிப்பு 201.9 பில்லியன் டாலர்களாக இருநதது.

முதலீட்டாளர்களின்படி, டொயோட்டா நிறுவனத்தை விட 6 பில்லியன் டாலர்கள்  டெஸ்லா அதிகம் பெற்றுள்ளது.  அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸை விட தற்போது மூன்று மடங்கு மதிப்புமிக்க நிறுவனமான டெஸ்லா மாறியுள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடக்கத்திலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்தன.கடந்த ஜனவரியில் ஜெர்மனியின் போக்ஸ்பேவன் நிறுவனத்தை முந்தி இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய டெஸ்லா இப்போது முதலிடத்தை எட்டியுள்ளது.

2003- ம் ஆண்டு தொடங்கப்பட்ட டெஸ்லா,  82 ஆண்டுகள் மோட்டார் உலகில் கோலோச்சி வந்த டொயாட்டா நிறுவனத்தை முந்தி சாதனை படைத்துள்ளது. உலகிலேயே அதிக லாபத்தில் இயங்கும்  டொயாட்டா நிறுவனம் 2019- ம் ஆண்டு நிதியாண்டில் 10.46 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 281.20 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments