சீனாவின் 59 செயலிகளுக்கு தடை - இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு..!

0 4205

சீனாவின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்று பேசியுள்ள மைக் பாம்பியோ, இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீன செயலிகள் தடை செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடும், தேசிய பாதுகாப்பும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments