உலக அளவில் 1.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2187

சர்வதேச அளவில் புதிதாக ஒரு லட்சத்து 90ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சமாக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஒரே நாளில் 4ஆயிரத்து800 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட, அந்த எண்ணிக்கையும் 5லட்சத்து 18ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 51ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 44ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிரிழப்பை பொறுத்தவரை பிரேசிலில் ஒரே நாளில் ஆயிரத்து 57 பேர் பலியாகியுள்ளனர். அதற்கடுத்தப்படியாக, அமெரிக்காவில் 676 பேரும், மெக்சிகோவில் 648 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களில் 51ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 8ஆயிரம் பேருக்கும், மெக்சிகோவில் 5ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments