மும்பையில் ஜூலை 15 வரை 144 தடையுத்தரவு அமல்..!

0 1890

மும்பையில் ஜூலை 15ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள், மருத்துவ அவசர சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டு இதர நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடக் கூடாது என்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட எங்கும் கூட்டம் கூடக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழுமையாக கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

மும்பையில் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து நவி மும்பை பகுதியிலும் 15ம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்ட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது, ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments