பாக்.விமானிகளின் பைலட் உரிமங்களை சோதிக்குமாறு யுஏஇ கடிதம்

யுஏஇ எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான விமான நிறுவனங்களில் விமானிகளாக பணியாற்றும் பாகிஸ்தானியர்களின் பைலட் உரிமங்களை சோதனைக்கு ஆட்படுத்த வேண்டும் என யுஏஇ விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநருக்கு அது கடிதம் அனுப்பி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள 860 விமானிகளில், 262 பேர் தவறான வழிகளில் தேர்ச்சி பெற்று பைலட் உரிமம் வைத்துள்ளதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியதை தொடர்ந்து, குறிப்பிட்ட உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
போலி உரிம ம் பெற்றவர்களில் 141 பேர் பாகிஸ்தானின் அரசு நிறுவனமான PIA -வில் பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலி உரிமங்களை வைத்து, யுஏஇ விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், எத்திகாட், ஏர் அரேபியா, பிளைதுபாய் ஆகியவற்றில் பணியாற்றும் பாகிஸ்தான் பைலட்டுகளை களை எடுக்க யுஏஇ தயாராகி வருகிறது.
Comments