கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை - தமிழக அரசு

0 3008

கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதாரத் துறை சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாதிரிகள் சேகரிப்பது லேப் டெக்னீஷியன்களின் அன்றாடப் பணி, அதை செய்ய மறுப்பதன் மூலம், தங்கள் கடமையை செய்வதில் இருந்து தவறுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

தற்போது பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவே அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள், மருத்துவம் சாராத பணியாளர்கள் சுயநலமற்ற முறையில் பணியாற்றி வரும் நிலையில், லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments