சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு - டிஜிபி உள்ளிட்டோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

0 2154

சாத்தன்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக பதிலளிக்க டிஜிபி உள்ளிட்டோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் அளித்த புகார் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் டி.ஜி.பி திரிபாதி, தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி கிளை சிறை நிர்வாகம் 6 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப ஆணையம் உத்தரவிட்டது.

இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, மருத்துவ சிகிச்சை அறிக்கை, சிறையில் பதியப்பட்ட விவரங்கள், மாஜிஸ்திரேட் விசாரணையின் விவரம் ஆகியவற்றுடன் விரிவான பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments