கொரோனாவால் சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் உயிரிழப்பு

0 1516

சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிமாறன் உட்பட மொத்தமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

போரூர், பள்ளிக்கரணை, மத்திய கைலாஷ், வடபழனி பகுதிகளில் உள்ள வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். சவுகார்பேட்டை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments