கருப்பின நபரை தவறாக கைது செய்த போலீஸ் தரையில் குப்புற போடும் வீடியோ வெளியானது

0 1701

அமெரிக்காவில் தவறாக கைது செய்யப்பட்ட கருப்பின நபர், ஜார்ஜியா சிட்டி போலீசார் தனக்கு எதிராக அதிகபட்ச உடல்வலுவை பயன்படுத்தியதாகவும், சிவில் உரிமைகளை மீறும் வகையில்  நடந்து கொண்டதாகவும் வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்தோனியோ ஸ்மித் என்ற அந்த நபர் வால்டோஸ்டாவின் ஜார்ஜியா சிட்டி  நகரில் பிப்ரவரி மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.  ஆனால் இந்நடவடிக்கையின்போது போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்மித்திடம் விசாரித்து கொண்டிருக்கையில், பின்னால் வந்த இன்னொரு போலீஸ் அதிகாரி அலெக்காக தூக்கி தரையில் குப்புற போட்டதோடு, கையை வளைத்து மேலே அமர்ந்தார்.

இதில் ஸ்மித்தின் கை முறிந்துள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்த ஸ்மித் தற்போது போலீசாருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். ஜார்ஜ் புளோயிட் சம்பவத்தால் போராட்டங்கள் நடக்கும் நிலையில் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments