அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க ரூ. 75.28 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1098

59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளுக்கு 75 கோடியே 28 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்களைப் பொதுப்பணித்துறையின் மூலம் அமைக்க முதற்கட்டமாக 75 கோடியே 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைக்கவும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments