உடல்நிலை பாதித்த நபரை அனுமதிக்க மறுத்த 50 மருத்துவமனைகள் : மருத்துவமனை வாசலிலேயே இறந்த பரிதாபம்

0 7892

கர்நாடகாவில் உடல்நிலை பாதித்த தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க  50 மருத்துவமனைகள் மறுத்து விட்டதாகவும், இதனால் மருத்துவமனை வாசலிலேயே அவர் உயிரிழக்க  நேரிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பெங்களூரு  நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த   ஜவுளிக்கடை அதிபரான அவர்,  27-ந் தேதி  அதிகப்படியான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நேரிட்டதால் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு  பரிசோதித்த டாக்டர்கள், படுக்கை காலியாக இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.  இதுபோல  18 மருத்துவமனைகளில்  பரிசோதனை செய்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.

32 மருத்துவமனைகளில் படுக்கை காலியாக இல்லை என்று கூறி அனுப்பியுள்ளனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன்  அடிப்படையில்  அனுமதிப்போம் என்று  மருத்துவ ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து  பரிசோதனை நடத்தி விட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, துரதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments