திருமணம் நடந்த மறுதினம் மணமகன் உயிரிழப்பு - இறுதிச் சடங்கில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா

0 25954

பீகாரில் திருமணம் முடிந்த மறுதினமே மணமகன் இறந்ததுடன், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. டெல்லி குருகிராமில் வேலைபார்த்த இளைஞரின் திருமணம் பான்டாவில் உள்ள பாலிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றது.

திருமணத்திற்கு முதல் நாள் கடும் வயிற்றுப் போக்காலும், சோர்வாலும் அவதிப்பட்ட அவருக்கு பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமண சடங்குகளில் கலந்து கொண்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.

ஆனால், குடும்பத்தினர் உடனடியாக அவரது இறுதிச் சடங்குகளை செய்து விட்டதால், கொரோனா சோதனை செய்ய இயலவில்லை. தகவல் அறிந்து மாவட்டநிர்வாகம் நடத்திய சோதனையில், திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments