கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது - WHO எச்சரிக்கை

0 16751

கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கையும் 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என கவலை தெரிவித்ததுடன், தற்போது இருப்பதைக் காட்டிலும், வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளோடு அது உருவாகிய இடத்தை கண்டறிவதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பவிருப்பதாகவும், கொரோனா எப்படி பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும், அப்போதுதான் எதிர்காலத்துக்காக நாம் தயாராக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments