’’உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான தினம் இன்று’’

0 649

மருத்துவர்களின் தன்னலமற்ற மக்கள் சேவையை நினைவு கூரும் வகையில், இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும், மருத்துவ மேதையுமான பிதன் சந்திர ராய், மருத்துவ துறையில் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் பணியை மேற்கொண்டுள்ளதால் இறைவனுக்கு இணையாக மருத்துவர்களை நம்புகின்றனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனாவை எதிர்த்து, உயிர்களை காக்கும் உன்னத பணியில் மருத்துவர்களே முன்கள வீரர்களாக நின்று போராடி வருகின்றனர்.

புவியின் பரிணாம வளர்ச்சியில் உட்சபட்ச சாத்தியமாக வளர்ந்திருக்கக் கூடிய மனித உயிர்களை பாதுகாத்து, நலமாக வைத்திருக்கும் அளப்பரிய சேவையை அளிக்கின்றனர் மருத்துவர்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments