14 நாடுகளின் பயணிகளுக்கு 27 நாடுகளில் பயணிக்க அனுமதி

0 1137

14 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ள போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியர்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சீனாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சீனர்களை ஏற்கத் தயார் என்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இந்தியா, ரஷ்யா , பிரேசில் நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளான 27 நாடுகளுக்குள் பயணம் மேற்கொள்ள ஜப்பான், நியுசிலாந்து, கனடா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments