மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

0 1101

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 7ம் தேதி முதல் 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 3 வாரங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 17 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 11 ரூபாய் 14 காசுகள் வரையிலும் விலை உயர்ந்தன.

இந்நிலையில் நேற்றும், இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை. அதே சமயம் மானியமில்லாத சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் 1 ரூபாய் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களில் ஆங்காங்கு உள்ள விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டு வரியை பொறுத்து 4 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதேபோல் விமானங்களுக்கான எரிபொருள் விலையும் 7.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயர்வது இது 3வது முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments