வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு..!

0 1629

வழி பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து ஊராட்சி பகுதிகளில் உள்ள ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் கொண்ட, அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஜுலை 6ம் தேதிக்கு மேல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அதற்கான வழிபாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதன்படி, தனிமனித இடைவெளி அவசியம், மாஸ்க் அணியாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதியில்லை, பிரசாதம் ,தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை மற்றும் சிலைகள் , புனித நூல்களை ஆகியவற்றை தொட்டு வணங்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அரசு வலியுறுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments