இறுதிக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை-பிரதமர் ஆலோசனை

0 5509

கொரோனாவுக்கான தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விரைவில் கொரோனாவுக்கான தடுப்பூசியை உலகம் அடைந்துவிடும் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கான மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்கள் நிதியுதவி அளித்துள்ள பி.எம். கேர்ஸ் என்ற அறக்கட்டளை மூலமாக, ரூபாய் 100 கோடியை மருந்து தயாரிப்புக்காக பிரதமர் வழங்கியுள்ளார்.

சில வகை மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதிக்கும் நிலைக்கு இதனால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு மருந்து கிடைத்ததும் அதனை எப்படி முறைப்படுத்துவது என்று பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்களப் பணியாளர்களுக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் முதலில் இவை கிடைக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த மருந்து எங்கும் யாருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றும் இவற்றுக்கான தொழில்நுட்பம், விரைந்த தயாரிப்பு, தனியார் பங்கேற்பு குறித்தும் மோடி ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments