சென்னை-புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

0 4567

சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அவர் சென்னை காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார். கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவிக்கள் நகர் முழுவதும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் குற்றங்கள் குறைந்து, குற்றவாளிகள் சிக்குவது அதிகரித்தது.

பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,செயலாக்கத்துறையின் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை மாநகருக்கு புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments