அதிகாலையில் 3 சக்கர மிதிவண்டியில் வந்த காய்கறி வியாபாரியிடம் வழிப்பறி

0 1889

சென்னை பாரிமுனையில் அதிகாலையில் மூன்று சக்கர மிதிவண்டியில் வந்த காய்கறி வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று பாரிமுனை அரசு பல் மருத்துவமனைக்கு எதிரே அதிகாலையில் மூன்று சக்கர மிதிவண்டியில் வந்த காய்கறி வியாபாரி சங்கரை வழிமறித்த, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரிடமிருந்த செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து சிசிடிவிக் காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வந்த பூக்கடை போலீசார், வியாசர்பாடியை சேர்ந்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட கொள்ளையர்கள் நால்வரை கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் இதே போல் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்கள் மூவரும் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒரு கொள்ளையன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments