10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பாடம் குறைக்கப்படவில்லை என விளக்கம்

0 1434
ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

10ம்வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லையென பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு 10ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு இரண்டு தொகுதிகளாகப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரே ஒரு தொகுதியாக மட்டுமே புத்தகம் வழங்கப்படுவதாகவும், இதனால் பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் கடந்த ஆண்டுபோல் இல்லாமல், ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளதாகவும்,மொத்தம் உள்ள 27 பாடங்களில் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இடம்பெற்ற தேவையற்ற, கூடுதல் பயிற்சி வினாக்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments