வந்தேபாரத் திட்டத்தில் தமிழகத்தில் விமானங்கள் இயக்க அனுமதி மறுப்பா?

0 2713

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல்  விமானங்களை  இயக்க   வேண்டும் என வெளியுறவு அமைச்சக செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் விமானங்கள் இயக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதால் வெளிநாட்டுத் தமிழர்கள் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக திமுக தரப்பில் மனு தாக்கலானது.

கடந்த முறை நடந்த  விசாரணையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களுக்கு தமிழக அரசு, அனுமதி மறுப்பதாகவும் மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டது. இன்று நடந்த விசாரணையில்  தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments