ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

0 3240
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 37,048ஆக உயர்வு

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக லேசான ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ((28ம் தேதி)) 4,640 ரூபாயாக இருந்த 1 கிராம் தங்கம் விலை நேற்று ((29ம் தேதி)) 4,624 ரூபாயாகவும், நேற்று முன்தினம் 37 ஆயிரத்து 120 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை நேற்று 36 ஆயிரத்து 992 ரூபாயாகவும் குறைந்திருந்தது.

இந்நிலையில் 1 கிராம் தங்கம் விலை இன்று 7 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 631 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 56 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 48 ரூபாயாகவும் உள்ளது.

தங்கம் விலை உயர்ந்தபோதிலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையான 53 ஆயிரத்து 100 ரூபாயாகவே இன்று உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments