பெண்களை மிரட்டி வழக்கில் சிக்கிய காசியின் தந்தை கைது

0 1909

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் தந்தை தங்கபாண்டியனை, சாட்சியங்களை அழிக்க முயன்ற புகாரில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்த விவகாரத்தில் காசி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவனது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப், மெமரி கார்டு போன்றவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இருந்து ஏராளமான ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து தனது மகனை காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை அழித்ததாகவும், காசோலையை தவறாக பயன்படுத்தியதாகவும், பைக் மோசடியில் பங்கு பெற்றதாகவும் கூறி சிபிசிஐடி போலீசார் காசியின் தந்தை தங்க பாண்டியனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments