ஆக்ராவுக்குள் ஊடுருவிய ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்

0 2983
4 டிரோன்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விவசாயத்துறை

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவுக்குள் ஊடுருவிய வெட்டுக்கிளிகளில் 60 சதவீதத்தை டிரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழித்து விட்டதாக விவசாயத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானில் இருந்து  வடமாநிலங்களின் பரவலான பகுதிகளில் பரவி, விவசாய பயிர்களில் கடும் பாதிப்பை வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து  வெட்டுக்கிளிகளை விரட்டுவது, அழிப்பது போன்ற பணிகளில்  விவசாயிகளும், விவசாயத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  ஆக்ராவுக்குள் இன்று ஆயிரகணக்கான வெட்டுக்கிளிகள் ஊடுருவின.  இதையடுத்து வெட்டுக்கிளிகள் மீதும், அவை தங்கியிருந்த செடி கொடிகள்   மீதும் அதிகாலை 4 மணி முதல் 4 டிரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை விவசாயத்துறையினர் தெளித்தனர்.இதில்   60 சதவீத வெட்டுக்கிளிகள் கொல்லப்பட்டு விட்டதாக கூறியுள்ள விவசாயத்துறையினர், எஞ்சியவை  பரத்பூர், மதுரா நோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments