வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ்நிலையம்...,இந்திய வரலாற்றில் முதல்முறை!

0 21720

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் கஸ்டடியில் இறந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனை,' உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது' என்று போலீஸ்காரர் மகராஜன் கேட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலையத்தில் அதுவும் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்புக்கு சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் ஒத்ழைக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே வருவாய்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட முதல் போலீஸ் நிலையம் சாத்தான்குளம்தான் என்று சொல்லப்படுகிறது.imageஇது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான என்.சி. அஸ்தானா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' இந்தியாவில் காவல்துறை சட்டம் 1861- ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. இந்த இடத்தில் மூத்த அதிகாரிகள் மீது கூட நம்பிக்கை இல்லையா? என்ன ஒரு அவமதிப்பான சம்பவம் இது '' என்று வேதனை தெரிவித்துள்ளார்.

என்.சி அஸ்தானா முன்னாள் கேரள மாநில டி.ஜி.பியாக இருந்தவர். எல்லை பாதுகாப்புப்படை மற்றும் சி.ஆர்.பி.எப் - பின் கூடுதல் இயக்குனராகவும் இருந்துள்ளார். 1986- ம் ஆண்டு ஐ.பி.எஸ் பட்டம் பெற்ற இவர் 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments