கொரோனா கண்டறியும் பணியில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி

0 5211

கொரோனா பாதிப்பை கண்டறிய பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

உடலின் ஆக்ஸிஜன் செறிவு, நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றின் சீரான அளவை உடனடியாக தெரிந்து கொள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் பயன்படுகின்றன. கொரோனா தாக்குதலின் உச்சகட்டத்தில் சுவாசப் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்வதால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் அவ்வப்போது பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு சோதனை செய்யப்படுகின்றனர்.

95 என்கிற அளவுக்கு கீழ் காட்டினால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்கிற சமிக்ஞையை பல்ஸ் ஆக்ஸி மீட்டர் காட்டுவதால் இந்தக் கருவியை வாங்கிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

2100 ரூபாய்க்கு மருந்தகங்களில் விற்கப்பட்டவை, விலை உயர்ந்து 2,700 முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் ரூபாய் 1,200 முதலே விற்பனைக்கு கிடைக்கும் பல்ஸ் ஆக்ஸீமீட்டர் கருவிகளின் விலை உயர்வை முறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments