’மனைவி பொட்டு வைக்க மறுக்கிறார்!' - போராடி விவாகரத்து பெற்ற கணவர்

0 10209

ந்து  முறைப்படி பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிந்து, கைகளில் வளையல் அணிவது வழக்கம். இந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காததால் கணவன் மனைவிக்கு விவாகரத்து வழங்கியிருக்கிறது கௌகாத்தி உயர் நீதிமன்றம்.
 
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் 2012 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான சில தினங்களிலேயே புதுப் பெண் குங்குமம் வைக்காதது, வளையல் அணியாதது போன்ற காரணங்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் மாப்பிள்ளையின் உறவினர்களுக்கும் ஒத்துவராத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சண்டை  ஏற்பட்டுள்ளது அடுத்த ஆண்டே இருவரும் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளனர். 

பிறகு அந்தப் பெண், மணமகன் வீட்டார் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகக் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டைப் பெண்ணால் நிரூபிக்க முடியவில்லை. அப்போதிலிருந்தே இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.தொடர்ந்து, பெண்ணின்  கணவர் கௌகாத்தி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி வழக்கு தாக்கல் தொடுத்தார்.

வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பெண் கணவருக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி  செய்தது. ஆனால், கண்டிப்பாக விவாகரத்து பெற்றே தீர வேண்டும் என்கிற  உறுதியுடன் இருந்த கணவர் கௌகாத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "குங்குமம் மற்றும் வளையல் அணிய மனைவி மறுப்பது  திருமண பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றே  நினைக்க வேண்டியது உள்ளது. . இந்த செயல் மனுதாரருடன் அந்தப் பெண் தொடர்ந்து வாழ விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது அதனால் இருவருக்கும் விவாகரத்து வழங்குகிறோம்" என்று தீர்ப்பு வழங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments