கொரோனா சிகிச்சைக்கு பில் 14 லட்சம்.. மருத்துவமனை அளித்த அதிர்ச்சி..!

0 5855

கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் இறந்த நபரின் குடும்பத்தினரிடம் 14 லட்சம் ரூபாய்க்கு பில் கொடுத்து, டெல்லி நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் (Fortis) மருத்துவமனை அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த 7 ஆம் தேதி இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுனானி மருத்துவரான நோயாளி, 15 நாட்கள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறு அன்று அவர் மரணமடைந்தார்.

14 லட்சம் ரூபாய் பில்லில் மருத்துவ காப்பீட்டுத் தொகையான 4 லட்சம் ரூபாயை கழித்த பின்னர் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்திய குடும்பத்தினர், எஞ்சிய தொகைக்கு முத்திரை பேப்பரில் எழுதி உறுதி அளித்த பின்னர் உடலை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சிகிச்சைக்கான பில் வழங்கப்பட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments