ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவ தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் - 15 நாட்கள் திடீர் மருத்துவ விடுப்பு

0 6165

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவ தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் விணிலா, ஏற்கனவே 4 நாட்கள் விடுப்பு எடுத்த நிலையில் தற்போது 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்சை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கு முன்பு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அவர்கள் இருவருக்கும், போலீசார் மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருந்தனர்.

அவர்கள் இருவரும் சிறையிலேயே உயிரிழந்த நிலையில், அதற்கு மறுநாளில் இருந்து அவர்களுக்கு மருத்துவ தகுதி சான்று அளித்த மருத்துவர் விணிலா 4 நாட்கள் விடுப்பில் சென்றார்.

விடுப்பு முடிந்து அவர் இன்று பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவர் விணிலா மேலும் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறையில் அடைப்பதற்கு போதுமான உடல் நலத்துடன் இருப்பதாக காவல்துறையினரின் வற்புறுத்தலில் பேரில், மருத்துவர் விணிலா சான்று அளித்ததாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments