சென்னையில் வரும் ஆண்டுகளில் 2015ஐ விட 10 மடங்கு அதிக மழைக்கு வாய்ப்பு

0 13152

பசுமை இல்ல வாயு அதிகளவு வெளியேற்றபடுவதால்  சென்னையில் 2015இல் பெய்ததை விட, வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிக மழை பெய்யவும், அதனால் பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. எச்சரித்துள்ளது.

2015 நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை சென்னையில் அதிகபட்சமாக 33.32 சதவீதம் மழை பதிவானது. இதனால் வெள்ளம் நேரிட்டு  தண்ணீர் தேங்கியது. 

இந்நிலையில் சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட  கடலோர நகரங்களில்  பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான அவசியம் குறித்த ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டது.

அதன் முடிவுகளில்,   பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்கள், சென்னையில் 2015-ம் ஆண்டு பெய்ததை விட, வரும் ஆண்டுகளில், 10 மடங்கு அதிகமாக 233.9 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்படவும், அதனால் பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments