முதியவர் ஒருவரை காவலர் கன்னத்தில் அறைந்த காட்சி

0 34423

திருச்சியில் சாலையில் செல்லும் முதியவர் ஒருவரை காவலர் ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டோன்மெண்ட் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் சைக்கிளில் வந்த முதியவரை காவலர் லேசாக இடித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் திடீரென காவலர் முதியவரை அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த காட்சிகள் வேகமான பரவிய நிலையில் சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே முதியவரை கன்னத்தில் அறைந்த காவலர் உறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் இளங்கோவன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments