மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

0 1088

மும்பையின் அடையாளங்களில் ஒன்றான தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திங்களன்று நள்ளிரவு 12 மணியளவில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், அனைவரும் கராச்சி பங்குச்சந்தை தீவிர தாக்குதலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, 2008 நவம்பர் 26ல் நடைபெற்றதை போல் தாஜ் ஹோட்டலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளான். இதையடுத்து தாஜ் ஹோட்டலுக்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புரங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே தொலைபேசி அழைப்பு பாகிஸ்தானிலிருந்து விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல் உட்பட மும்பையில் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டினர் 28 பேர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்படிப்பட்ட தாக்குதலை குறிப்பிட்டு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments